18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி யில் சிறப்பு அறிமுக வகுப்பு !

இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி யில் சிறப்பு அறிமுக வகுப்பு !

எழுதியவர்: ஆசிரியர் August 26, 2018, 2:35 pm

இராமநாதபுரம்  சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி யில்  குரூப் -2 க்கான  சிறப்பு அறிமுக  வகுப்பு   நடந்தது.    இதில் வங்கித் தேர்வு  மற்றும்  போலீஸ் பணிக்கான தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்வது குறித்த அறிமுக வகுப்பு நடந்தது .

இந்த  அறிமுக வகுப்பில் குரூப்-1 ல்தேர்ச்சி பெற்ற வேலூர்       டி.எஸ்பி. ராமச்சந்திரன்   பங்கேற்று பயிற்சிக்கான தேர்வு குறித்த அனுபவங்களை விளக்கிப் பேசினார். கடந்த 2017    நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற வங்கி பணிக்கான தேர்வில்  இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் பரமக்குடி அரவிந்தசாமி, ராமநாதபுரம் வின்சி, அபிநயா, கீர்த்தனா உள்ளிட்ட 29 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களும் தங்களது அனுபவங்களை புதிய மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.

இதில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல், இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாகி ராஜேஷ், அருண் பாலாஜி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!