17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீரசிகாமணி முகையதீன் சுன்னத் ஜமாஅத் சார்பாக கேரளமக்களுக்கு வெள்ளநிவாரண உதவி…

வீரசிகாமணி முகையதீன் சுன்னத் ஜமாஅத் சார்பாக கேரளமக்களுக்கு வெள்ளநிவாரண உதவி…

எழுதியவர்: ஆசிரியர் August 23, 2018, 10:50 pm

நெல்லை மாவட்டம் வீரசிகாமணி முகையதீன் சுன்னத் ஜமாஅத் சார்பாக கேரளமக்களுக்கு வெள்ளநிவாரண உதவி. வீரசிகாமணி முகையதீன் ஜூம்ஆ மஸ்ஜித் ஜமாஅத் சார்பாக 22/08/2018 புதன் அன்று ஹஜ்ஜூப்பெருநாள் சிறப்புத்தொழுகை மற்றும் மதரஸா மாணவ மாணவியரின் ஆண்டுவிழா நடைபெற்றது.

சிறப்புத்தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர். மதரஸா மிஸ்பாஹூல் ஹூதா ஆண்டுவிழாவில் சிறுவர் சிறுமியருக்கான பேச்சுப்போட்டி, கேள்விபதில் மற்றும் உரையாடல் என பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டது. ஹஜ்ஜூப்பெருநாள் சிறப்புத்தொழுகை மற்றும் மதரஸா மிஸ்பாஹூல் ஹூதா ஆண்டுவிழாவில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு தொழுகையின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்புத்தொழுகை மற்றும் மதரஸா ஆண்டுவிழாவின் போது ரூ.25000 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

இறுதியாக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கேரளமக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தகவல் – நன்றி அபுபக்கர்சித்திக்

அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!