17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வில்லாபுரம் தீ விபத்தில் கடைகள் நாசம்..

மதுரை வில்லாபுரம் தீ விபத்தில் கடைகள் நாசம்..

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2018, 12:44 pm

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் கோமாதா தெருவில் விஜயன் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் நிறுவனம் மற்றும்  ரமேஷ் என்பவருக்கு  சொந்தமான மோட்டார் ரீவைண்டிங் கடை மற்றும் சுரேஸ் என்பவருக்கு சொந்தமான கவரிங் நகை தொழிற்சாலை உள்ளது.

இன்று அதிகாலை 7 மணியளவில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கவரிங் கடையில் ஏற்பட்ட தீ பக்கத்தில் உள்ள ரமேஷ் மற்றும் விஜயன் பர்னிச்சர் கடைகளில் மளமளவென தீ பற்றி எரிந்தது, . திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூபாய் 50 லட்டம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு அவனியாபுரம் காவல் ஆய்வாளர் எஸ்தர் , மற்றும் மதுரை பெரியார் நிலையம் தீயணைப்பு வாகனம் வந்து தீயணைத்த போது நீர் பற்றாக்குறை ஏற்பட்டது, இதனையடுத்து அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனம் வர 1 மணி நேர தாமதம் ஏற்பட்டதில் தீயணைக்க தாமதம் ஏற்பட்டது , காலை 7 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து மூன்றரை மணி நேரத்திற்கு பின் 10.30 மணிக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!