17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஆலய 10 ஆம் ஆண்டு உற்சவ விழா..

ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஆலய 10 ஆம் ஆண்டு உற்சவ விழா..

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2018, 5:44 pm

இராமநாதபுரம் ஆக,20, இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டித்தேவன்வலசை, சுப்புத்தேவன்வலசை கிராமத்தில் அருள்புரிந்து வரும் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயிலின் 10 வது ஆண்டு உற்சவ விழா செவ்வாய் கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக கணபதி பூஜை மற்றும் சிறப்பு யாகம் வளர்த்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பாண்டி முனீஸ்வரர் மற்றும் கருப்பண்ண சாமி பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அன்னதானம் நடந்தது.

மேலும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகியும் கிராமத்தலைவருமான உடையத்தேவன் தலைமையில் ஆண்டித் தேவன் வலசை மற்றும் சுப்புத்தேவன்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!