17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் 150 கிலோ பான் மசாலா பறிமுதல்…

இராமேஸ்வரத்தில் 150 கிலோ பான் மசாலா பறிமுதல்…

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2018, 3:29 pm

இராமேஸ்வரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக துறைமுகம் போலீசாருக்கு ரககிய தகவல் கிடைத்தது. இதனன தொடர்ந்து போலீசார் துறைமுகம் பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 3 மூடைகளில் சுமார் 150 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர். பான் மசாலா, குட்கா பாக்கெட் மூடைகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த தடைசெய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!