17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைந்து கீழைநியூஸ் கேரளா நிவாரண உதவிகள்..

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைந்து கீழைநியூஸ் கேரளா நிவாரண உதவிகள்..

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2018, 12:38 am

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் (WORKING JOURNALIST UNION OF TAMIL NADU-WJUT) சார்பாக, மாவட்ட தலைவர் ஜெ.அஸ்கர், மற்றும் சங்க நிர்வாகி வேளாங்கண்ணி ஆகியோர் சுமார் நாற்பது ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை திண்டுக்கல் மாவட்ட SDPI கட்சியின் அலுவலகத்தில் முறையாக ஒப்படைத்தனர்.

இதைப்பற்றி மாவட்ட தலைவர் ஜெ.அஸ்கர் கூறுகையில், “கன மழையின் காரணமாக கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே,தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, நிவாரணப் பொருட்களை கோவைக்கு சென்று சங்கத்தின் மாநிலத் துணை தலைவர் பிரதீப் குமார் அவர்களிடம் நேரடியாகவே வழங்கி வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிகள் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில், மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட நல் உள்ளங்கள் படைத்த சிலர் நிவாரணப் பொருட்களை வழங்கவேண்டும் என்று தெரியப்படுத்தினர், அதனடிப்படையில் மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்ந  நிவாரண பணிக்கு  ஆன்லைன் செய்திகளில்  பதிந்து  வரும் “கீழை நியூஸ்” (செய்தி) நிறுவனம், மதுரையை சார்ந்த ஓகே நிஜாமுதீன், திண்டுக்கல்லை சேர்ந்த பொறியாளர் பார்த்திபன், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்பாத்துறை கிராம நிர்வாக அலுவலர்  ராஜி மற்றும் கிராம உதவியாளர் ராமசாமி ஆகியோர் பங்களிப்பு செய்தனர்.

அவர்கள் வழங்கிய நிதி உதவியில் கீழ்கண்ட பொருட்கள் கொள்முதல் செய்து ஒப்படைக்கப்பட்டது:-

அரிசி மூட்டைகள், நைட்டிகள், போர்வைகள், பெட்சீட், தண்ணீர் பாட்டில்கள், சானிட்டரி நாப்கின்கள், மாதுழை பழங்கள், இன்னும் பல பொருட்களை வழங்கி உதவியுள்ளனர்,

இப்பொருட்கள் 21/08/2018 அன்று மதியம் திண்டுக்கல்லில் இருந்து SDPI கட்சியின் சார்பாக தேனி மார்க்கமாக நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லப்பட உள்ளது  ஆகையால் நிவாரண  பொருட்களை திண்டுக்கல் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முகமது, மாவட்ட துணை தலைவர் சேக் அப்துல்லா, மற்றும் தொகுதி தலைவர் முகமது நசீர், முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது” என்று கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!