17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அன்னதானம்..

ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அன்னதானம்..

எழுதியவர்: ஆசிரியர் August 20, 2018, 1:30 pm

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ராஜீவ்காந்தி 74வது    பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கபீபு ரகுமான் தலைமையிலும்,  மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆலம் முன்னிலையிலும்,  மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் அன்னதானத்தை    தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் அகமது கபீர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் அப்பாஸ், ஒருங்கிணைப்பாளர் காஜா நஜுமுதீன், நயினார் கோயில் வட்டார தலைவர் ஜோதிபாலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கௌசிமகாலிங்கம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியாக இராமநாதபுரம் நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!