17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவிக் கரம் நீட்ட கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை வேண்டுகோள்

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உதவிக் கரம் நீட்ட கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை வேண்டுகோள்

எழுதியவர்: keelai August 19, 2018, 5:01 pm

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கான நிதிகளை திரட்டி உதவிட கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ”நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட இயற்க்கை பேரிடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்காக கீழக்கரை பிரபுக்கள் தெருவில் இயங்கி வரும் மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே உங்களின் மேலான பொருள் மற்றும் நிதியுதவிகளை எங்கள் அறக்கட்டளைக்கு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உதவி செய்ய விரும்புவோர் தங்களின் பொருள் மற்றும் நிதியுதவிகளை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை, ஜலால் காம்ப்ளக்ஸ், வள்ளல் சீதக்காதி சாலை, கீழக்கரை என்ற அலுவலகத்தை தொடர்புகொண்டு வழங்கலாம்.அல்லது கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொண்டால் எங்கள் நிர்வாகிகள் உங்கள் இல்லம் தேடி வந்து உதவிககளை பெற்று கொள்வார்கள்.

இந்த இறைப்பணியில் எங்களுடன் இணைந்து செயலாற்ற உங்களை அன்புடன் அழைக்கிறோம்” என்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!