17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரியனேந்தல் ஹரீஸ்வர்மா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு விழா..

அரியனேந்தல் ஹரீஸ்வர்மா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2018, 4:45 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் ஹரீஸ்வர்மா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது . இப்பள்ளியின் ஒன்பதாவது விளையாட்டு விழாவை பள்ளியின் நிறுவனர் டத்தோ ஸ்ரீ பரந்தாமன் ஆயர்பாடி   விளையாட்டுழாவை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பள்ளியின் நான்கு அணிகளின் அணிவகுப்பு மரியாதையை பள்ளிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டனர். பள்ளி விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி மைதானத்தை சுற்றி வந்து பள்ளியின் முதல்வர் சண்முகநாதனிடம் தீபத்தை வழங்கினார்கள். அதற்கு முன்னதாக தேசியக்கொடி மற்றும் விளையாட்டு ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.  பின்னர் அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விளையாட்டில் கரகாட்டம் சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடிய மாணவர், மாணவிகளை பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ஹரிஷ் வர்மா கல்வி அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரி மாயா ஸ்ரீ பரந்தாமன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளி செயலர் சுரேஸ் பாபு, பொருளாளர் கல்பனா தேவி, நிர்வாக அதிகாரி சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!