18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி அருகே வீரபாண்டியில் புளியமரத்தில் லாரி மோதி விபத்து – ஓட்டுனர் படுகாயம்…

தேனி அருகே வீரபாண்டியில் புளியமரத்தில் லாரி மோதி விபத்து – ஓட்டுனர் படுகாயம்…

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2018, 9:24 am

தேனி மாவட்டம் வீரபாண்டி ஆற்றுபாலம் அருகில் வாகனம் ஒன்று புளியமரத்தில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கரமாக மோதியது இதில் முன்பகுதி நொருங்கியது இதில் ஓட்டுநர் கைகால்கள் நன்றாக சிக்கிக்கொண்டது.

விபத்தில் சிக்கிய ஓட்டுனரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 20 நிமிடங்கள் போராடி மீட்க முடியவில்லை, பின்பு தீயணைப்பு வாகனம் வந்து வாகனத்தில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டனர். ஒட்டுநர் உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் ஓட்டுநர் அளவுக்கு அதிகமாக மது அருந்துதியிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என அறியப்பட்டது.

ஒட்டுநர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!!  மது அருந்தியிருந்தாலோ, தூக்கம் வந்தாலோ தயவுசெய்து ஓய்வெடுத்து பின்பு செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்,  இல்லாவிட்டால் உங்களின் குடும்பத்தின் நிலையை  சிந்தித்து பாருங்கள்.

மேலும் இந்த விபத்தில் ஓட்டுனர் பரிதாபமாக இரண்டு கால்களும் முறிந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!