18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தன்று ஆட்சியர் சாதனையாளர்களுக்கு விருது..

இராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தன்று ஆட்சியர் சாதனையாளர்களுக்கு விருது..

எழுதியவர்: ஆசிரியர் August 17, 2018, 2:20 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத மது ஒழிப்பு பணியை பாராட்டி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முனைவர் எஸ்.வெள்ளைத் துரைக்கு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் முனைவர் எஸ்.நடராஜன் நற்சான்றிதழ் வழங்கினார். ராமநாதபுரம் காவல் சரக துணைத் தலைவர் (DIG) என்.காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பாராட்டினர்.

அதேபோல் இராமநாதபுரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் முனைவர் எஸ். நடராஜனிடமிருந்து சமூக ஆர்வலருக்கான நற்சான்று பெற்றார் இராமநாதபுரம் வழக்கறிஞர் சோமசுந்தரம். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உள்ளார்.

கொடி நாள் நிதி வசூலிப்பில் தமிழக ஆளுநரிடம் 11 முறை விருது பெற்ற இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமாரின் தொடர் சாதனையை பாராட்டி சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு நற்சான்று பெற்றுக் கொண்டார். செல்வக்குமார் தான் பணியாற்றிய மாவட்டங்களில் கொடி நாள் நிதி வசூலிப்பில் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!