முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டில்லியில் நேற்று காலமானார். மறைந்த வாஜ்பாய்க்கு பா.ஜ., சார்பில ராமநாதபுரம் அரண்மனை முன்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மாநில துணைத் தலைவர்கள் குப்புராமு, கூரியூர் சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர் குமார், நகர் தலைவர் குமரன், சேவா பாரதி மாவட்ட தலைவர் மதிசேகர பாண்டியன், மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மறைவுக்கு இராமநாதபுரத்தில் அஞ்சலி – வீடியோ பதிவு..
எழுதியவர்: ஆசிரியர் August 17, 2018, 1:20 pm




You must be logged in to post a comment.