18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி அமைதி ஊர்வலம்…

கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி அமைதி ஊர்வலம்…

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2018, 4:26 pm

திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இராமநாதபுரத்தில் இன்று (16/08/2018)  மாலை நடந்தது. இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணா சிலை பகுதியில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளான சின்னக் கடை, பழைய. புதிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே பீடர் ரோடு, வண்டிக்காரத் தெரு , மத்திய கொடிக்கம்பம் வழியாக அரண்மனை வாசல் பகுதியில் நிறைவடைந்தது.

பின்னர் மாவட்ட தி மு க செயலர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய செயலர் நல்ல சேதுபதி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் முகவை கிருபானந்தம், முன்னாள் நகர் செயலாளர் ரத்தினம், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரஜி சேதுபதி, நகர் செயலர் தலைவர் மாரியப்பன், முன்னாள் எம் எல் ஏ திசை வீரன், நகர் தி மு க செயலர் கார் மேகம், மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்ம கார்த்திக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் மாவட்ட தலைவர் குட் லக் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணகாந்தி, பேச்சாளர் கருணாகரன், மாவட்ட துணை தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் வலம்புரி, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், இளைஞர் காங் மாவட்ட பொது செயலர் மணிகண்டன், பொறுப்பளார் சுஜித்குமார், நகர் தலைவர் கோபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலர் விடுதலை கிட்டு, மாவட்ட செயலர் சருபர் சாதிக் திருவாடானை தொகுதி செயலர் பழனிக்குமார், செய்தி தொடர்பாளர் சத்தியராஜ், இந்திய கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் முருகபூபதி, மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரு.சுப்ரமணியன், நகர் செயலாளர் சுப்ரமணியன், மக்கள் நீதி மய்யம் இளைஞரணி நிர்வாகி நிவாஸ் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!