18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுதந்திர தினத்தை முன்னிட்டு TNTJ மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு TNTJ மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 7:27 pm

இந்தியாவின் 72 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்குகிளை ஆகியன இணைந்து 15.8.2018 புதன்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைத்து கிளைத்தலைவர் பதுருசமான் தலைமையில், தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை கீழக்கரை காவல் துறை ஆய்வாளர் P. முத்துலெட்சுமி B.Sc அவர்கள் துவக்கிவைத்தார்.  இந்த இரத்ததான முகாமில் அனைத்து மத சமுதாய சகோதர சகோதரிகளும் கலந்துகொண்டு தங்களது இரத்தங்களை தானமாக வழங்கினார்கள்.

முகாமிற்கு ஆர்வத்துடன் தங்களது இரத்தத்தை தானம் செய்ய வந்திருத்த 25 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் பலகீனத்தால் இரத்ததானம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!