17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 6:45 pm

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது..  தமிழ்நாட்டில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன்படி, மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித சங்கிலி போராட்டம் மாலை 4 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் பழனி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கந்தசாமி நகர செயலாளர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை இரவு நேரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகின்றது.அரசு அதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.மேலும் குழந்கள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழ்நாட்டில் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இனிவரும் காலகட்டங்களில் பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும்.உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் பாண்டி, இராஜமாணிக்கம், ராஜா,மற்றும் பெண்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பழனிசெய்தியாளர் ரியாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!