17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 72-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. – புகைப்பட தொகுப்பு..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 72-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. – புகைப்பட தொகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 6:42 pm

72-ஆம் ஆண்டு சுதந்தர தின விழா  ஆகஸ்டு 15.8.2018, காலை 8.50  முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது. 7இவ்விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக டாக்டர். நூருல் ஹவா M.B.B.S, M.S, D.G.O, நிர்வாக இயக்குனர், ஷிபான் மருத்துவமனை செயலாளர், ஷிபான் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அவர்கள், கொடியோற்றத்துடன் தொடங்கிவைத்தார்.

இவ்வவிழாவில் மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி உதவியாளர்கள் பங்கு பெற்றனர்.  அதனை தொடர்ந்து மாணவி பாத்திமா ஷிபானா இறைவணக்கத்துடன் தொடங்கி, கல்லூரி முதல்வர் A.R நாதிரா பானு கமால் அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியினை தொடங்கி சுதந்திர தினவிழா 71 ஆண்டுகள் நிறைவு பெற்று 72 ஆம் ஆண்டு  அடியெடுத்து வைத்துள்ளதை மாணவிகளுக்கு உரையாற்றினார்.

கல்லூரியில் தலைமை தாங்கிய டாக்டர். நூருல் ஹவா அவர்களுக்கு சுதந்திர தின நினைவு பரிசு கல்லூரி நிர்வாகம் வழங்கியது. மாணவி பாத்திமா மரியம் B.A ஆங்கிலம் விடுதலை போராட்ட வீரர்களை பற்றி உரையாற்றினார். அவரை தொடர்ந்து மாணவி அபிநயா B.sc கணிதவியல் பெண்கள் நாட்டின் கண்கள் என்று உரைத்து பெண்களின் இன்றைய சுதந்திரத்தைப்பற்றியும், பெண்களுக்கு இன்று பாதுகாப்பு இல்லை என்றும், பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் மாணவிகள் வந்தே மாதரம் பாடலைப்பாடி சுதந்திர உணர்வை வளர்த்தர். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக டாக்டர். நூருல் ஹவா அவர்கள் சுதந்திர உணர்வை எடுத்துரைத்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, சான்றிதழ்களுடன் வழங்கினார். இறுதியாக ரௌவ்லத்துல் ஜன்னா மாணவிகளுக்கு நன்றியுரை வழங்கினார். மாணவிகள் தேசிய கீதம் முழங்கி, மரம் நடுதலுடன் இவ்விழா இனிதே முடிவடைந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!