17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல்வேறு பள்ளி சுதந்திர தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள்..

பல்வேறு பள்ளி சுதந்திர தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள்..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 3:10 pm

இந்தியாவின் 72வது சுதந்திர தின விழா மிகவும் விமர்சையாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் பல பள்ளிக்கூடங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கீழக்கரை ராேட்டரி சங்க நிர்வாகிகளும் கீழக்கரையில் உள்ள சுப்ரமணியம் ஜெயலக்சுமி நாடார் மெட்ரிக் பள்ளி மற்றும் மாயாகுளம் சோ்மன்தாய் உயர்நிலைப்பள்ளி கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் அப்பா மெடிகல் சுந்தரம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கீழக்கரை ரோட்டரி சங்க செயலாளர் செய்யது முகம்மது ஹசன் மற்றும் இன்னும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!