17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஈஸ்ட் கோஸ்ட் இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

ஈஸ்ட் கோஸ்ட் இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 1:46 pm

இராமநாதபுரம் அரண்மனை முன்பு ஈஸ்ட் கோஸ்ட் இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் மற்றும் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை காவல்துறை துணை தலைவர் காமினி கொடி அசைத்து துவக்கி வைத்தார் காவல்துறை துணைத்தலைவர் விளம்பர பலகையிள் கையெழுத்திட்டார். பின்னர் பொதுமக்களும் கையெழுத்திட்டனர்.

இப்பேரணி அரண்மனையில் இருந்து துவங்கி முக்கிய வீதி வழியாக வந்து இறுதியாக வழிவிடு முருகன் கோவில் அருகில் நிறைவுபெற்றன. வரும் வழியில் மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பது பற்றி கோஷமிட்டு கையில் விளம்பர பதாகை ஏந்தி வந்தனர். பொதுமக்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் தினேஷ் துணைச் செயலாளர் பாபு, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடராஜன், கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவிதா,  பள்ளி முதல்வர் முத்துக்குமார் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!