17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பசு காவலர்கள் என்ற பெயரில் விவசாயின் கறவை மாடுகளை வழிமறித்து காவல்துறையில் ஒப்படைத்த வி.ஹெச்.பி. – மீட்டுக்கொடுத்த எஸ்.டி.பி.ஐ. ..

பசு காவலர்கள் என்ற பெயரில் விவசாயின் கறவை மாடுகளை வழிமறித்து காவல்துறையில் ஒப்படைத்த வி.ஹெச்.பி. – மீட்டுக்கொடுத்த எஸ்.டி.பி.ஐ. ..

எழுதியவர்: ஆசிரியர் August 13, 2018, 8:40 pm

குமரி மாவட்டம் வில்லுகுறி எனும் ஊரைச் சார்ந்த விவசாயி ஒருவர், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தையில் பால் வியாபாரத்திற்காக 3.5 லட்சம் மதிப்புள்ள மாடுகளை வாங்கி தனது சொந்த ஊருக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.

அப்போது வடமாநிலங்களில் தங்களை பசு பாதுகாவலர்கள் என்று அறிவித்து கும்பல் கொலையில் ஈடுபட்டுவரும் சங்கக்பரிவார் அமைப்பை போன்று, தமிழகத்தில் தங்களை பசு பாதுகாவலர்கள் என்று வெளிப்படையாக சொல்லாத விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஹிந்து மஹா சபை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த வாகனத்தை வழிமறித்து விவசாயிடம் அத்துமீறியுள்ளனர். தான் இந்து சமூகத்தை சார்ந்தவன் தான் என்று கூறியும் அவர்கள் மாடுகளை கீழிறக்கியதோடு, நாங்குநேரி காவல்நிலையத்தில் மாடுகளை ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளுக்கு வந்ததை அடுத்து, நிர்வாகிகள் நேரடியாக நாங்குனேரி காவல் நிலையத்திற்கு சென்று, அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கறவை மாடுகளை மீட்டு சம்பந்தப்பட்ட விவசாயிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மாடுகளை வாகனத்தில் ஏற்றி அவரை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!