17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சதக் பாலிடெக்னிக் இணைந்து நடத்திய இரத்த தான முகாம்..

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சதக் பாலிடெக்னிக் இணைந்து நடத்திய இரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 13, 2018, 8:19 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியுடன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததானம் முகாம் இன்று (13/08/2018) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு  ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் பேராசிரியர் அலாவுதீன் தலைமையில் வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக

துணை ஆளுநர் பார்த்தசாரதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்  கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் செய்யது முகம்மது ஹசன், பொருளாளர்முனியசங்கர், எபன், டாக்டர் ராசிக்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

மேலும் இந்த முகாமை பேராசிரியர்கள்  பாலசுப்பிரமணியன் மற்றும்  மரியதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.  இம்முகாமில் 150கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!