17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » சமையல் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கையில் வெண்ணெய் இருக்க.. நெய் வாங்க அலையும் கீழக்கரை நிர்வாகம்..

கையில் வெண்ணெய் இருக்க.. நெய் வாங்க அலையும் கீழக்கரை நிர்வாகம்..

எழுதியவர்: ஆசிரியர் August 13, 2018, 3:15 pm

கையில் வெண்ணெய் இருக்க நெய்கு அலைவதாக பழமொழி சொல்வதுண்டு, ஆனால்  அதைத் தான் ஹைமாஸ் விளக்கு விசயத்தில் செய்து வருகிறது.  பயனில்லாமல் குப்பையோடு கடற்கரை ஒரத்தில் கிடக்கும் விளக்கு, அதுபோல் அமைக்கப்பட்ட விளக்குகளும் ஏரியாமல் இருக்கும் அவலம்.

இந்நிலையில்  கீழக்கரை நகராட்சி சார்பாக மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம், செக்கடி முன்பாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கு  ₹ 4.90 லட்சம் செலவில் இன்று (13/08/2018) விளக்கு அமைக்கும் பணிகள் துவங்கியது.

இதுகுறித்து மின்ஹாஜி பள்ளி பொருளாளர் ரமீஸ்கான் அவர்கள் கூறுகையில் ” நகருக்குள் ஹைமாஸ் அமைக்கப்பட்ட எல்லா இடங்களிலும் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  இந்நிலையில் இன்னொரு விளக்கு என்பது அத்தியாவசியமானது தானா ? என்பதையும் அதிகாரிகள் யோசித்து,  அது பழுதானால் உடனே சரிசெய்து மக்கள் பயன் பெறவும் வழிசெய்ய வேண்டும் “என்றார்.

தெற்கு தெரு முன்னாள் கவுன்சிலர் அ.மு.என்ற காதர் சாகிபு கூறுகையில் “தெற்கு தெரு ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. புகார் மனு பல எழுதியும் பலன் ஏதுமில்லை. ” என்றார்.   இதுசம்பந்தமாக நகராட்சி மின் ஊழியர்களிடம் கேட்டதற்கு “இன்று அமைக்கும் ஹாமாஸ் LED விளக்குகளால் ஆனது. இந்த விளக்கு பழுதானால் நாங்களே சரி செய்து விடுவோம். ஆனால் ஏற்கனவே எரியாமல் உள்ள விளக்குகளை சரிசெய்ய சென்னை நபர்கள் வர வேண்டும் ” என்கிறார்.

நகராட்சியில் இருந்து பல மாதங்களாக இதே பதில் வருவதால் இன்று இரவு 08.30 மணி அளவில், மக்கள் டீம் சார்பாக, தெற்குத் தெரு ஹைமாஸ் விளக்கு முன்பாக மெழுகு திரி ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: மக்கள் டீம் :

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!