18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக கல்வி உதவி தொகை விண்ணப்ப மற்றும் வழிகாட்டி முகாம்..

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக கல்வி உதவி தொகை விண்ணப்ப மற்றும் வழிகாட்டி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2018, 5:27 pm

இன்று (12/08/2018) ஞாயிற்று கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை மின்ஹாஜ் பள்ளி அருகில் நடைபெற்றது. இந்த முகாமை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம் S.I. முஹம்மது தவ்ஹீத்  தலைமையேற்று நடத்தினார். செயலாலர் அஜ்மல் கான் முகாமை துவக்கி வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சகோதரர் M. சல்மான் கான் மற்றும் உறுப்பினர் S. செய்யது அல்தாஃப் செய்திருந்தனர்.சிறப்பு விருந்தினராக மஜ்மவுல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையின் செயலாளர் S. முஹைதீன் அடுமை கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது உறுப்பினர்கள், அய்யூப் கான், முஹைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த முகாமில் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை விண்ணபித்து பயன்பெற்றனர். இந்த வழிகாட்டி முகாம் பற்றி மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் கூறுகையில், “பொதுமக்கள் பலர் அரசின் நலத்திட்டங்கள் பற்றி முழுமையாக அறியாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விழிப்புணர்வு முகாம் மூலம் பொதுமக்கள் பயன் அடைவார்கள் “என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!