17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகள் தொடக்கம் – அடுத்த 25 நாட்களுக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்..

தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகள் தொடக்கம் – அடுத்த 25 நாட்களுக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2018, 12:27 am

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தண்டவாள புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதால், அவ்வழித்தடத்தில் 25 நாட்களுக்கு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கேத்தாண்டப்பட்டி முதல் வாணியம்பாடி வரையிலான தண்டவாள புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. மதியம் 12 மணிக்குத் தொடங்கிய பணிகள் மாலை 5 மணி வரையில் நடைபெற்றன. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து காக்கிநாடா செல்லும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், தர்பங்காவில் இருந்து மைசூரு செல்லும் பாங்மதி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் ரயில்களும் 3 மணி நேரம் தாமதாகப் புறப்பட்டன.

மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இன்னும் 25 நாட்களுக்கு இந்த நிலையே நீடிக்கும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!