18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » பாலியல் வன்கொடுமை மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு..

பாலியல் வன்கொடுமை மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 11:08 pm

24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மத்திய அமைச்சர் ராஜன் கோஹைன் மீது அஸ்ஸாம் மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 2-ம் தேதி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் மீது, நாகோன் காவல் நிலையத்துக்கு  இரண்டு புகார்கள் வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 8 மாதங்களுக்கு முன் நடைபெற்றதாகவும், அந்த பெண்ணுக்கு கோஹைனை முன்பே தெரியும் என்றும் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் வீட்டில் கணவர் உட்பட யாரும் இல்லாதபோது, அவரிடம் கோஹைன் தவறாக நடந்து கொண்டதாக புகார் தரப்பட்டுள்ளது. முழு விசாரணையும் முடிந்த பின்னரே, கோஹைன் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!