17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேரளா வெள்ளம் – முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் இணைந்து பார்வையிட்டனர் – இதுதான் மக்கள் நலன் ஆட்சி..

கேரளா வெள்ளம் – முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் இணைந்து பார்வையிட்டனர் – இதுதான் மக்கள் நலன் ஆட்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 3:05 pm

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது.

மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 439 முகாம்களில் 53,401 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் இடுக்கி பகுதியில் தரையிறங்க வேண்டிய சூழலில் அங்கு மோசமான வானிலை காரணமாக வயநாடு பகுதியில் தரையிறக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!