18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாசீம் பீவி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ‘முகவை வாக்கத்தான் – 2017’ விழிப்புணர்வு பேரணி

தாசீம் பீவி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ‘முகவை வாக்கத்தான் – 2017’ விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: keelai February 19, 2017, 5:42 pm

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், தானம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘முகவை வாக்கத்தான் – 2017’ நேற்று 18.02.17 காலை 9.30 மணியளவில் ராஜா மேல் நிலை பள்ளியில் இருந்து துவங்கியது. இதில் கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி மாணவிகள் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

அங்கிருந்து நடைபயணமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் சீமை கருவேல மரங்களை வேரோடு அழித்தல், கண்மாய், குளம், ஊரணி, நீர்நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குதல் சம்பந்தமான விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!