கீழக்கரை நகராட்சியின் பெரும் குறையாக இன்றளவும் சுகாதாரம் இல்லை என்பதில் யாரும் மாற்று கருத்து கொள்ள முடியாது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என பல திசையில் இருந்து நெருக்கடி கொடுத்ததின் விளைவாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கீழக்கரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதலாக 55 நபர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் தினந்தோறும் வீதிகளை சுத்தப்படுத்தி, வீடுதோறும் குப்பைகளை எடுக்கும் பணிகள மேற்கொள்ளப்படும் என அறியப்படுகிறது.
இதுகுறித்து இன்று கீழக்கரை அலுவலகம் வந்த ஆணையாளரிடம் கேட்டதற்கு “முதற்கட்ட நடவடிக்கையாக குப்பைகளை வீடுகளுக்கு சென்று எடுக்கும் நடைமுறை ஒரு சில பகுதிகளில் இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளனர். படிப்படியாக எல்லா பகுதிகளிலும் குப்பை எடுக்க இன்னும் ஒரு வாரகாலம் ஆகும் என்றும், நகராட்சி பணியாளர்கள் அதிகாலை நேரத்தில் வருபவர்கள் என்பதால், குப்பை எடுக்கும் நேரத்தை அறிந்து கொண்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், மேலும் கீழக்கரை நகருக்குள் இன்னும் 10 நாட்களுக்குள் மாற்றத்தை காணலாம் என்றும் சுகாதாரம் குறித்த எந்த ஒரு நகராட்சி பணிகளுக்கும் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உடனே நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்” என கூறினார்.
ஊரின் நலன் சுகாதாரம் மூலம் மேன்பட்டால், ஆணையாளர் நாராயணனுக்கு , ஊரார் ஒருங்கிணைந்து பாராட்டு விழா நடத்த மக்கள் டீம் சார்பாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அவ்வமைப்பின் அப்துல் காதர் கூறினார்.
தகவல் : மக்கள் டீம் :





You must be logged in to post a comment.