17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஓட்டுநர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்..வீடியோ பதிவு..

இராமநாதபுரத்தில் ஓட்டுநர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்..வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2018, 11:47 am

இராமநாதபுரத்தில் வாடகை கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் மோட்டார் தொழிலாளர்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் , மூன்றாம் நபர் காப்பீடு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வாடகை கார், வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நியூட்டன் தலைமையில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய் கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகநாதன், அதன் மாவட்ட செயலாளர் பக்கீர் முகமது, தாலுகா மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்க தலைவர் சேதுபாலசுப்ரமணியன், அதன் செயலாளர் ராமச்சந்திரன், இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்க மாவட்ட தலைவர் வரதராஜன், செயலாளர் குமாரவேலு , ஆட்டோ ஓட்டுனர் மாவட்ட செயலாளர் சிஐடியு செந்தில்,  சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி , எல்பிஎப் மாவட்ட செயலாளர் வின்சென்ட் அமலதாஸ் , மற்றும் வாடகை கார் ஓட்டுநர் கள் சங்க நிர்வாகிகள் சிவகுமார், இந்திரஜித் (எ) மதி, செல்வம், மோகன், ஆத்திச்செல்வம்,பழனி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!