18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி அருகே கிணறு தோண்டும் போது தொழிலாளி மரணம்..

சாயல்குடி அருகே கிணறு தோண்டும் போது தொழிலாளி மரணம்..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2018, 4:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னி ராஜபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குருசாமி, 48. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமாடன் என்பவரது வீட்டில் இன்று (06/8/18) காலை சக தொழிலாளர்களுடன் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 20 அடி ஆழத்திற்கு மேல் தோண்டிய போது திடீரென மணல் சரிந்தது. இதில் சிக்கிய குருசாமியை மீட்ட போது மணல் சரிவு அதிகரித்தது.

இதனால் குருசாமியை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இராமநாதபுரம் தீயணைப்பு அலுவலர் சாமி ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு குருசாமி உடலை மீட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!