18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் அபூர்வ ஆந்தை – வனத் துறையினர் உதவியோடு பிடிக்க முயற்சி

கீழக்கரையில் அபூர்வ ஆந்தை – வனத் துறையினர் உதவியோடு பிடிக்க முயற்சி

எழுதியவர்: keelai February 19, 2017, 1:31 pm

கீழக்கரை கிழக்கு தெரு பள்ளி அருகில் சன்ஷைன் டிராவல்ஸ் உரிமையாளரின் வீட்டு தாழ்வாரத்தில் ஆபூர்வ வகை ஆந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 19.02.2017 காலை முதல் அங்கு அமர்ந்திருந்த  ஆந்தையை கண்டு வீட்டில் உள்ள குழந்தைகளும், பெண்களும் பயந்து கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் முகம்மது அஜிஹருக்கு தகவல் தெரிவித்தனர்.

மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் மூலமாக வனத் துறையினருக்கு உரிய தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ஆந்தையை பிடிக்க கீழக்கரை வன காப்பாளர் இராஜேந்திரன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் உமைய செல்வம், சேதுபதி களமிறங்கி அபூர்வ ஆந்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர், ஆனால் ஆந்தை தப்பி சென்று விட்டது. விரைந்து நடவடிக்கை எடுத்த வனத் துறையினருக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!