18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அழகப்பன் நகர் தண்டவாளத்தில் பள்ளி சீருடையுடன் மாணவி பிணம்..வீடியோ பதிவு..

மதுரை அழகப்பன் நகர் தண்டவாளத்தில் பள்ளி சீருடையுடன் மாணவி பிணம்..வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2018, 5:07 pm

மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் அருகில் தண்டவாள பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவி பிணமாக கண்டெடுப்பு. இது குறித்து மதுரை ரெயில்வே போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மாணவி இன்று காலை தென் மாவட்டம் நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் படிக்கட்டில் நின்ற அவர் தவறி விழுந்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!