17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட தடகள அமைப்பு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பங்கேற்பு!

இராமநாதபுரம் மாவட்ட தடகள அமைப்பு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பங்கேற்பு!

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2018, 5:38 pm

இராமநாதபுரம் மாவட்ட தடகள அமைப்பு சார்பில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு விழாவில் திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி மாணவ மாணவியரை வாழ்த்தி பேசினார். இராமநாதபுரம் மாவட்ட தடகள அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் அரசு பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் விழா ராமநாதபுரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார் விழாவில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு , மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் கே.ஜே.பிரவின், திமுக பிரமுகர் அய்யனார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!