17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல் -4பேர் கைது…

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல் -4பேர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2018, 4:16 pm

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் கூடுதல் பஸ் நிலையம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, அந்த வழியாக சென்ற 4லாரிகளை சோதனையிட்ட போது மணல் இருந்தது தெரியவந்தது. ஆனால் மணல் ஏற்றி செல்வதற்கான எவ்வித உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வரவே போலீசார் 4 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விருதுநகர் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளி நெல்லைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்ததது. இதனை தொடர்ந்து மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்கள் கீழப்பாட்டத்தினை வடிவேல்(31), அதை ஊரைச் செல்லத்துரை(37), சன்னதி புதுக்குடியை சேர்ந்த ரவி(43), முதுமலைக்கொழுந்தபுரத்தினை சேர்ந்த உய்யக்காட்டன்(39) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!