18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி கூராங் கோட்டை ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் கோவில் மண்டல அபிஷேக விழா…

சாயல்குடி கூராங் கோட்டை ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் கோவில் மண்டல அபிஷேக விழா…

எழுதியவர்: ஆசிரியர் August 3, 2018, 7:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கூராங் கோட்டை ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கடந்த ஜீன் 18 ந்தேதி வெகு சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல அபிஷேக விழா ஆடி பெருக்கு 18 ந் தேதி ( ஆக 03 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 12.15 மணிக்குள் தர்மமுனீஸ்வரர் கோவில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள் நடந்தது தர்மமுனிஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இவ்விழாவில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், கடலாடி தாசில்தார் முத்துலெட்சுமி, சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன், தினக் காவலன் பத்திரிகை ஆசிரியர் முருகநாதன் மற்றும் விழா கமிட்டியினர், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கின் ஜெர்ரி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை எ.உசிலங்குளம் பஞ்சாயத்து ஊராட்சி செயலர் செந்தாமரை செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!