18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை பிரதான சாலைகளில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறதா?? நகராட்சி கவனத்தில் கொள்ளுமா??

கீழக்கரை பிரதான சாலைகளில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறதா?? நகராட்சி கவனத்தில் கொள்ளுமா??

எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 5:40 pm

கீழக்கரையில் பிரதான சாலைகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு சமீப காலமாக தொிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு கூடுதல் வலு சோ்க்கும் வண்ணம் ஜீம் ஆ பள்ளிக்க செல்லும் சாலை மற்றும் யூசுஃப் சுலைஹா மருத்துவமனை பகுதிகளில் கட்டிடக் கழிவுகள் நடு சாலைகளில் கொட்டப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள கீழை மரச்செக்கு நிர்வாகி ஒருவர் கூறுகையில் கீழக்கரையில் பல இடங்களில் கொட்டப்படுவதாக தொிகிறது. ஆனால் இப்பகுதியில் சாலையைில் இருபுறமும் பள்ளத்தை சரி செய்யும் வகையில் சமப்படுத்த வண்ணமாக கொட்டப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் அதே சமயம் கட்டிடக் கழிவுகளை சாலைகளை சமப்படுத்த கொட்டுவது முறையான செயலாகாது. சாலைகளை பதனிட சரியான முறைகளை பின்பற்றினாலே நிலையான பலனை தரும். அதே சமயம் இதுபோல் கட்டிடக் கழிவுகளால் சாலைகளை நிரப்புவதால் விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புண்டு.. நகராட்சி நிர்வாகம் இந்த விசயத்தில் கவனம் செலுத்துமா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!