17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி பேருராட்சியில் தொடரும் பிளாஸ்டிக் ரெய்டு..

சாயல்குடி பேருராட்சியில் தொடரும் பிளாஸ்டிக் ரெய்டு..

எழுதியவர்: ஆசிரியர் July 31, 2018, 2:32 pm

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக குறைந்து வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 1 ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், செயல் அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . அந்த வகையில் சாயல்குடி பேருராட்சி செயல் அலுவலர்  (பொறுப்பு) குமரேசன் சாயல்குடி பேருராட்சி எல்கைக்குள் உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், டீக்கடை மற்றும் பேக்கரி உரிமையாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் கொண்ட ஆலோசனை  கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு ( கேரிபை, பிளாஸ்டிக் கப்  )  போன்ற பொருட்களை விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. இதை வர்த்தக சங்கத்தினரும், வியாபாரிகளும் ஏற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சாயல்குடி பேரூராட்சி  இளநிலை உதவியாளர் பாபு, மேஸ்திரி முனியாண்டி வரி விதிப்பாளர்கள் திருமேனி ,கரிமுல்லா, முருகேசன் உள்ளிட்ட ஊழியர்கள் தொடர்ந்து சாயல்குடி பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த படுகிறதா என கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,

இந்த ஆய்வின் போது சில கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரி பை, பிளாஸ்டிக் டம்ளர் என 20 கிலோவுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர், மேலும் இது போன்று பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப்படும் அதன்பின்பும் தொடர்ந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என பேருராட்சி அலுவலர்கள் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சாயல்குடி பேருராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு கனிசமாக குறைந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!