17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லூரி 13ம் பேட்ஜ் முதலாமாண்டு மாணவ, மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி..-

சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லூரி 13ம் பேட்ஜ் முதலாமாண்டு மாணவ, மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி..-

எழுதியவர்: ஆசிரியர் July 30, 2018, 5:33 pm

இராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லூரி 13ம் பேட்ஜ் முதலாமாண்டு மாணவ, மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. பாம்பன் சி எஸ் ஐ சர்ச் பாஸ்டர் பி.ரூஸ்வெல்ட் துவக்க விழா பிரார்த்தனை நடத்தினார். கல்லூரி பணியாளர்கள் பிரார்த்தனை பாடல் பாடினர். உதவி பேராசிரியை கல்வி தொடர்பாக பைபிள் வசனம் வாசித்தார். பாஸ்டர் (ஓய்வு) பாக்ய குமார் வாழ்த்து செய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றினர். கல்லூரி முதல்வர் டாலரோஸ் மேரி வரவேற்றார். கல்லூரி இயக்குனர் முனைவர் கபிரியல் தலைமை உரையாற்றினார்.

கல்வியின் அவசியம் குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிரியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பி.ராஜா பேசினார் . கல்லூரி தாளாளரும், மதுரை. – இராமநாதபுரம் சி.எஸ்.ஐ திருமண்டில சட்ட ஆலோசகருமான முனைவர் தேவ மனோகரன் மார்ட்டின் வாழ்த்துரை பேசினார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் ஆனந்த் நன்றி கூறினார். இராமநாதபுரம் சி எஸ் ஐ பாஸ்டர் கிறிஸ்டோபர் டேவிட் விழா பிரார்த்தனை நிறைவேற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!