17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு ஆள் கடத்தல் ஏஜன்ட் இருவர் கைது…

இலங்கைக்கு ஆள் கடத்தல் ஏஜன்ட் இருவர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் July 28, 2018, 8:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சிங்கிளி தீவில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த இருவர் சிக்கினர்.  இது குறித்து மண்டபம் வனச்சரகர் சதீஷூக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அறிவுறுத்தல் படி வனவர், வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பதுங்கி இருந்த இருவரையும் பிடித்து வந்து மண்டபம் வன உயிரின காப்பக அலுவலகம் கொண்டு வந்தனர்.

அவ்விசாரணையில் மண்டபம் முகாம் மீனவர் குடியிருப்பு நாகசாமி மகன் சிவக்குமார் 45, குஞ்சார் வலசையை சேர்ந்த நல்லாந்துரை மகன் பாஸ்கரன் வயது 40, ( இலங்கையை சேர்ந்தவர் ) இவர்கள் அகதிகளை மர்ப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் ஏஜன்ட்கள் எனவும் தெரிந்தது. இதையடுத்து இருவரும் மண்டபம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!