17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு 8வது ஆண்டு விழா – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பங்கேற்பு!

இராமநாதபுரத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு 8வது ஆண்டு விழா – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பங்கேற்பு!

எழுதியவர்: ஆசிரியர் July 28, 2018, 2:16 pm

இராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் 8 வது  ஆண்டுவிழா அதன் தலைவர் சேசுராஜ் தலைமையில் ஜனார்த்தனன் மஹாலில் நடைபெற்றது. துணை தலைவர் பாண்டியன் வரவேற்றார். செயலாளர் இராமகிருஷ்ண ஆண்டறிக்கை வாசித்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் நடராஜன், ஹெல்பேஜ் இண்டியா இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். செயற்குழு உறுப்பினர் அன்சாரி நன்றியுரையாற்றினார். இதில்  பொருளாளர் இரவீந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!