17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை…

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை…

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2018, 5:36 pm

இராமநாதபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் விநியோகம், வீடு, சொத்து, காலி மனை வரிகள் வசூலிக்கப்படுகிறது. புதிய வீட்டு வரி விதிப்பிற்கு ரூ. 4 ஆயிரம் பெற்றுக் கொண்டு வரி ரசீது போடப்படுவதாக இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடாந்து லஞ்ச ஒழிப்பு போலீசா கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் நகராட்சி பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனார்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் போலீசார் இன்று மதியம் நகராட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். வரி தண்டலர் ஒருவரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!