17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 4,5 தேதிகளில் மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டி-தடகள சங்க நிர்வாகிகள் தகவல்!

இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 4,5 தேதிகளில் மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டி-தடகள சங்க நிர்வாகிகள் தகவல்!

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2018, 4:04 pm

இராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் அதன் கூட்டம்    வேலுமாணிக்கம்    விளையாட்டு  ஹாக்கி மைதானம் அரங்கில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு  மாநில இணைச் செயலாளர் வேலு.மனோகரன் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் இன்பா ரகு, மாவட்ட விளையாட்டு அலுவலர்  பிரான்க் பால் ஜெயசீலன்,     துணைசெயலாளர்  அருள் பியர்சன் பிரவீன்,   துனை தலைவர்      நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து.    மாவட்ட செயலாளர் இன்பா ரகு  கூறியதாவது,.  இராமநாதபுரம் மாவட்ட  தடகள சங்கத்தின் சார்பாக       ஆகஸ்ட் 4,5 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான மாணவ மாணவியர்க்களுக்கான விளையாட்டுப் போட்டி இராமநாதபுரம் மாவட்ட சீதக்காதி சேதுபதி விளயாட்டு மைதானத்தில் நடைபெற இருப்பதால்  2.8.2018 தேதிக்குள் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள்[email protected] இந்த இணையத்தில் பதிவுகளை செய்யலாம். நடக்க இருக்கும்  தடகள போட்டிகள்  வயதின் அடிப்படையில்   நடைபெற     உள்ளது

இதில்(20,18,16,14) ஆகிய  வயதிர்க்குட்பட்டோர்      கலந்து கொள்ளலாம்.   போட்டியில்   கலந்து கொள்ளும்    விளையாட்டு வீரர்கள் வயது சான்றிதழ்   கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்.   போட்டிகளில் அதிக அளவிலான புள்ளிகள் பெரும் அணிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்  வழங்கப்படும்.     மேலும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு தகுதி அடிப்படையில் மாநில அளவிலான   போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு 7904323171, 9842360361, 9942109531 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.    இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும்     துணை செயலாளர் ஹனிபா மற்றும் அங்கத்தினர் கோபிநாத்,  முத்துக்குமார், குணா, சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!