17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் பேரூராட்சி மேஸ்திரி தகாத வார்த்தைகள் பேசுவதை கண்டித்து பெண் துப்பரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்., போலீசில் புகார் பரபரப்பு…

நிலக்கோட்டையில் பேரூராட்சி மேஸ்திரி தகாத வார்த்தைகள் பேசுவதை கண்டித்து பெண் துப்பரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்., போலீசில் புகார் பரபரப்பு…

எழுதியவர்: ஆசிரியர் July 26, 2018, 9:12 am

நிலக்கோட்டையில் மேஸ்திரி தகாத வார்த்தைகள் பேசுவதை கண்டித்து பெண் துப்பரவு தொழிலாளர்கள் பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசில் புகார் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 50 க்கும் மேற்பட்ட பெண் துப்பரவு தொழிலாளர்கள் உள்ளனர் இவர்களை அங்குள்ள மேஸ்திரி செல்லையா தகாத வார்த்தைகள் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளச்சல் ஏற்பட்ட 50 பெண் துப்பரவு தொழிலாளர்கள் பேருராட்சி அலுவலகம் முன்பு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அனைவரும் கையெழுத்திட்டு புகார் செய்தனர். புகாரில் செல்லையா ஏற்கனவே இது போன்ற புகாருக்கு ஆளாகி ஆயக்குடி மாற்றப்பட்டுள்ளார். நிலக்கோட்டையில் பணி மாற்ற உத்தரவு வாங்காமல் இங்குள்ள பெண் துப்பரவு தொழிலாளர்களை தகாத வார்த்தைகள் பேசி மன உளச்சல் ஏற்படுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!