17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நம்புதாளை ஸ்ரீகாளி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா மஞ்சுவிரட்டு!

நம்புதாளை ஸ்ரீகாளி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா மஞ்சுவிரட்டு!

எழுதியவர்: ஆசிரியர் July 24, 2018, 8:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கண்மாய்கரை குடியிருப்பு பகுதியில் வீற்றிருக்கும்     ஸ்ரீ      காளி      சக்தி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 13 ஆம் ஆண்டு   ஆடி பூச்சொரிதல்திருவிழாவை முன்னிட்டு நம்புதாளை கண்மாய்க்கரை குடியிருப்பு       நேருயுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்றம் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் மஞ்சுவிரட்டு வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டு விளையாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை,   மதுரை,  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காளைகள் பங்கேற்றன.  இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண நம்புதாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர்    பங்கேற்று மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திர இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள்  பிரபு, கண்ணன், கிராமத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்  செய்திருந்தனர். தொண்டி போலீசார் சார்பு ஆய்வாளர் மாரிச்சாமி தலைமையில்  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!