17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் நெல் கொள்முதல் நிறுத்தம் – பல லட்சம் வீணாகும் அபாயம் ..

வேலூரில் நெல் கொள்முதல் நிறுத்தம் – பல லட்சம் வீணாகும் அபாயம் ..

எழுதியவர்: ஆசிரியர் July 24, 2018, 10:47 am

வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுமார் 150 டன் நெல்மணிகள் சேதமடைந்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் சிறுவளையம், ரெட்டிவளம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெற்பயிர்களை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காலி கோணிப்பைகள் இல்லை என்று கூறி கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்த 150 டன்கள் அளவுக்கான நெற்பயிர்கள் கொள்முதல் நிலையத்தின் வெளியே ஆங்காங்கே குவியலாக கொட்டிவைக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வருவதால், இந்த நெற்பயிர்களை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே உரிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், கொள்முதலை அரசு நிறுத்திவைத்திருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!