இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சைவ பாண்டி. இவரது மகன் குணசேகரன், 31. இவருக்கு திருமணமாகி இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் சென்னை – திருவனந்தபுரம் வழித்தடத்தில் டிரைவராக பணியாற்றினார் . விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊர் வந்திருந்தார். கோட்டை மேடு வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை கடைக்கு வந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதி உயிரிழந்தார். சைவ பாண்டி புகார் அடிப்படையில் கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கமுதி அருகே அரசு பஸ் டிரைவர் லாரி மோதி பலி..
எழுதியவர்: ஆசிரியர் July 23, 2018, 11:41 am




You must be logged in to post a comment.