17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொறியாளர் வீட்டில் ரூ.1.88 லட்சம் நகை திருட்டு…

பொறியாளர் வீட்டில் ரூ.1.88 லட்சம் நகை திருட்டு…

எழுதியவர்: ஆசிரியர் July 22, 2018, 6:57 pm

இராமநாதபுரம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 56. இவர் வழுதூர் மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி வேலைக்குச் சென்ற இவர் மதியம் வீடு திரும்பினார் . அப்போது வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டு கிபந்த்து. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை, வைரத்தோடு, 2.50 கிலோ வெள்ளி பொருட்கள், கடிகாரம் 3 , எல் இ டி டி.வி, உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது கண்டு திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.1.88 லட்சமாகும்.

சம்பந்தப்பட்டவரின் புகார் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!