17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை மனு

வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை மனு

எழுதியவர்: ஆசிரியர் December 20, 2016, 12:07 am
கீழக்கரையில் அமைந்திருக்கும் முக்கியமான கல்வி மையங்களில் ஒன்று வடக்குத் தெருவில் உள்ள வடக்குத் தெரு ஜமா அத்தை சார்ந்த முகைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி.  இங்கு பல நூற்றுக் கணக்கான மாணவ,  மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.  சமீபத்தில் கீழக்கரை நகர் முழுவதும் புதிய சாலைகள் போட்ப்பட்டன, ஆனால் இப்பள்ளிக்கு செல்லும் சாலை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பழுதடைந்த நிலமையிலேயே உள்ளது.  இன்று கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர் ஜனாப். பசீர் அகமது மற்றும் பள்ளி நிர்வாகிகளான ஜனாப். முகைதீன் இபுராகீம் ஜனாப். சாதிக் மற்றும்; ஜனாப். மௌலா முகைதீன் ஆகியோர் கீழக்கரை ஆணையர் (பொறுப்பு) திரு.சந்திரசேகர் அவர்களை சந்தித்து இது சம்பந்தமாக மனு அளித்தார்கள். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர் இதற்கான பணிகளை விரைவில் செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்கள்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!