17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனநோயாளிகளை பாதுகாக்க கீழக்கரை மக்கள் டீம் முயற்சி…நாசா அமைப்பு ஒத்துழைப்பு..

மனநோயாளிகளை பாதுகாக்க கீழக்கரை மக்கள் டீம் முயற்சி…நாசா அமைப்பு ஒத்துழைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 21, 2018, 3:25 pm

கீழக்கரை சாலையோரம் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம்  கடந்த வாரம் கீழக்கரை மக்கள் டீம் அமைப்பு  சார்பாக மனு அளித்ததின் பேரில் இராமநாதபுரம் மாவட்ட  மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் தெருக்களின் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்திற்கு கொண்டு  செல்ல  ஏர்வாடி மனநல காப்பகம் மூலம், கீழக்கரை காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று (21/07/2018) காலை இரு காவலர்கள் துணையுடன்,  வடக்குத் தெரு நாசா ஆம்புலன்ஸ் மூலம் இரு ஆண், மற்றும் ஒரு பெண் என் மூவரை பிடித்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மனநல காப்பக லஊழியர் கூறுகையில் ” அவர்களுக்கு முதலுதவி பெற்று அவர்கள் சரியாகும் வரை எங்களது காப்பகம் மூலம் பராமரிப்பு அளித்து, அவர்களது விலாசம் தெரிந்து கொண்டு வீட்டில் கொண்டு போய் சேர்த்து விடுவோம் ” என்றார்.

இந்த முயற்சியில் ஈடுபட்ட மக்கள் டீம் அமைப்பு மற்றும் வடக்குத் தெரு நாசா அமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள்.

தகவல்:- மக்கள் டீம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!