17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பல்திறன் பயிற்சி – ஒரு புகைப்பட தொகுப்பு ..

நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பல்திறன் பயிற்சி – ஒரு புகைப்பட தொகுப்பு ..

எழுதியவர்: ஆசிரியர் July 21, 2018, 1:51 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்த இயக்குநர், கலை இயக்குநர், நடிகர், கூத்துப்பட்டறை ஆசிரியர், ஓவியர், போட்டோகிராபர் என பன்முகம் கொண்ட முத்துசாமி நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு,
* எழுத்துப் பயிற்சி
* நா நெகிழ் பயிற்சி
* நினைவாற்றல் பயிற்சி
* பாடல் பயிற்சி
* ஓவியப் பயிற்சி
*புகைப்படம் எடுக்கும் பயிற்சி
என பல வகையான பயிற்சிகள் அளித்தார். இவைகளோடு சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்டபடுத்தும் குறும்படங்களும் காட்டப்பட்டன.
மேலும் காரைக்குடியில் இருந்து பள்ளி மாணவர்களை பார்ப்பதற்காக வருகை தந்த கமலா தேவி மாணவர்களுக்கு நன்னெறிக் கதைகள் கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், உதவி ஆசிரியர் பா.தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!