17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை மக்கள் களம் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை வடக்கு தெரு அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி..

கீழக்கரை வடக்கு தெரு அல்-மதரஸத்துல் முஹம்மதியாவில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2017, 11:34 am

கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) வின் கீழ் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய பாட சாலையில் நேற்று 16.02.2017 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மதராசாவின் தலைமை நிர்வாகியும், சிறந்த மார்க்க கல்வியாளரான சகோ.ஆஷிஃப் தலைமை தாங்கினார்.

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர், கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர்.முஹம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்புரையாற்றி, மார்க்க கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்ரஸா மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடக்கு தெரு சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!